மேலும் அச்சிடுவதற்கான இடம் குறைவாக இருக்கும் கண்ணாடி பாட்டில்களுக்காக தனியான மாற்று நிற லேபிளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வகையான பானங்களிலும் நுகர்வோருக்கு தெளிவான தகவல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது.புதிய விதிமுறைகளின்படி 100 மில்லிலிட்டருக்கு 8 கிராமுக்கும் அதிகமான சர்க்கரை உள்ள பானங்களில் சிவப்பு நிற லேபிள் கட்டாயமாக இடம்பெற வேண்டும். 2.5 கிராம் முதல் 8 கிராம் வரை சர்க்கரை உள்ள பானங்களில் மஞ்சள் (Amber) நிற லேபிளும் 2.5 கிராமுக்கும் குறைவான சர்க்கரை கொண்ட பானங்களில் பச்சை நிற லேபிளும் இடம்பெற வேண்டும்.
அதேநேரத்தில் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படாமல் மற்ற உணவுப் பொருட்களை தயாரிக்க அல்லது மறுவிற்பனைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் Business to Business (B2B) உணவுப் பொருட்கள் என்ற புதிய வரையறையும் இந்த திருத்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் சர்க்கரை சார்ந்த உடல்நலப் பிரச்சினைகள் குறிப்பாக நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இனி பானம் வாங்கும் முன் அதன் நிற லேபிளை கவனிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய வழிகாட்டியாக இருக்கும்.






























