இதேவேளை லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சிற்றுண்டி வகைகளின் விலைகளும் 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளன. எனினும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முட்டை ரொட்டி மற்றும் பராட்டா போன்ற உணவுகளின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 25% முதல் 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி வருவதாகவும் தற்போதைய அதிக செலவின சூழ்நிலையில் அந்தச் செலவுகளை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.































