Tag: உலக செய்திகள்
புதிய விதிகளின்படி, தலைக்கவசம் அணியாமல் பயணித்தால் 135 யூரோ அபராதம் விதிக்கப்படலாம். அதேபோன்று, மற்ற சாலைப் பயனர்களுக்கு தெளிவாகத் தெரியக்கூடிய ஒளியைப் பிரதிபலிக்கும் பாதுகாப்பு உடை அல்லது சாதனம் இல்லாமல் பயணித்தால் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் இரவு நேரத்திற்கு மட்டும் அல்ல. பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும் பொதுச் சாலையில் பயணிக்கும் போது அவற்றைப் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே Seine-et-Marne, Alpes-Maritimes மற்றும் Yonne உள்ளிட்ட சில பகுதிகளில் தலைக்கவசம் […]
ஜெர்மனி விமான நிலையத்தில் வெடிகுண்டு, ஜெர்மனியின் லெய்ப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் பாதுகாப்பு அமைப்புகளை அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெற்கு ஓடுபாதை அருகே வெடிபொருள் பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வெடிகுண்டின் செயல்பாட்டு பகுதி பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் லெய்ப்சிக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட DHL சரக்கு விமானம் வானில் அடையாளம் காணப்படாத ஒரு பொருளுடன் மோதியதாக தகவல் […]
ஹோர்முஸ் நீரிணையில் புதிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான முக்கிய முன்னேற்றத்தை ஈரானும் ஓமானும் எட்டியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் கப்பல் இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியான தகவல்களின்படி வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்களுக்கான புதிய கடற்பாதையை ஈரான் நிர்வகிப்பதையும் வெளியேறும் கப்பல்களுக்கான பாதையை ஓமான் நிர்வகிப்பதையும் உள்ளடக்கிய திட்டம் குறித்து இரு […]
போதைப்பொருள் கும்பல் தலைவன் கைது, பிரான்ஸின் மார்செய் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் சக்திவாய்ந்த போதைப்பொருள் குற்றவியல் அமைப்பான DZ Mafia வின் முக்கிய தலைவராக சந்தேகிக்கப்படும் மெஹ்தி லரிபி அல்ஜீரியாவில் கடந்த ஜூலை மாத இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் நீதித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரான்ஸ் நீதிபதிகள் முன்னெடுத்து வரும் Octopus எனப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாகவே இவருக்கு எதிராக சர்வதேச கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. […]
Facebook Down, Meta நிறுவனத்துக்குச் சொந்தமான Facebook Instagram மற்றும் Messenger சேவைகள் இன்று ஜூலை 19 உலகின் பல நாடுகளில் தற்காலிகமாக செயலிழந்ததாக ஆயிரக்கணக்கான பயனர்கள் தெரிவித்துள்ளனர். Downdetector உள்ளிட்ட சேவை கண்காணிப்பு தளங்களில் உள்நுழைய முடியவில்லை Account Temporarily Unavailable என்ற பிழைச் செய்தி தோன்றியது News Feed ஏற்றப்படவில்லை மற்றும் சிலரால் பதிவுகளை வெளியிட முடியவில்லை எனப் புகார்கள் பதிவாகின. Instagram இலும் Feed ஏற்றப்படாதது பதிவுகள் வெளியிட முடியாதது உள்ளிட்ட சிக்கல்கள் […]
ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி தாய்லாந்து கொடியுடன் பயணித்த ஒரு சரக்கு கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை குறிவைத்ததாக ஈரானின் அரசுக்கு நெருக்கமான Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த கப்பல் IRGC வழங்கிய எச்சரிக்கைகளை புறக்கணித்து அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளோ அல்லது கப்பல் நிறுவனமோ உடனடி […]
அமெரிக்கா ஈரான் தாக்குதல் தொடர்பான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானின் ஏவுகணை அமைப்புகள் வான்வழி பாதுகாப்பு நிலைகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயன்படுத்திய வேகப்படகுகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்கு கப்பல் மீது IRGC தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது அண்மைய […]
அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம்மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றத்தையும் மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) வரும் ஜூன் 19 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் Bürgenstock மலைப்பகுதி விடுதியில் கையெழுத்தாக உள்ளது என்று சுவிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த இடம் அமெரிக்கா ஈரான் மற்றும் நடுவர் நாடுகளான பாகிஸ்தான் கத்தார் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் […]
சுவிட்சர்லாந் தில் மக்கள் தொகையை 1 கோடி (10 மில்லியன்) பேராக மட்டுப்படுத்தும் முன்மொழிவை வாக்காளர்கள் தேசிய வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர். வலதுசாரி அரசியல் கட்சியான Swiss People’s Party முன்வைத்த இந்தத் திட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிரந்தர குடியிருப்பு மக்கள் தொகை 1 கோடியை தாண்டக்கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆரம்ப முடிவுகளின்படி சுமார் 54% முதல் 55% வரையிலான வாக்காளர்கள் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். தற்போது சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை சுமார் […]