Tag: France Latest Update
பாரிஸ் மோன்ட்பர்னாஸ் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பிற்பகல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் மேடையில் இருந்த பயணிகளை மிரட்டியதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் கூறுகையில் ரென்னெஸிலிருந்து வரவிருந்த ரயில் வருவதற்கு முன்பே சந்தேக நபருக்காக போலீஸ் காத்திருந்தது. குடும்ப வன்முறைக்காக முந்தைய முறைகளிலும் பதிவு செய்யப்பட்டிருந்த இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்வதாக மிரட்டியதால் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்தார். போலீசாரைக் கண்டதும் அவர் பயணிகளை அச்சுறுத்தத் […]
பிரான்சில் காசோலை மோசடிகளை எதிர்த்து போராடுவதற்கான புதிய லாபரோன் சட்டம் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட் இரண்டாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இந்த மாதம் அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடப்பட்டது. புதிய சட்டம் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க பல புதிய நடவடிக்கைகள் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம், மோசடியான IBAN கணக்குகளின் தரவுத்தளத்தை உருவாக்கி வங்கி மோசடிகளை தடுப்பது. அதேபோல் காசோலை மோசடிகளை குறைப்பதற்கான விதிகளும் சட்டத்தில் அடங்கியுள்ளது. குறிப்பாக வங்கிகள் பொய்யான அல்லது போலி […]
பிரான்சில் ஆவணமில்லா குடியேற்றத்தாரர்கள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் குடியேற்றம் நாட்டின் பாதுகாப்பு குறைவிற்கு முக்கிய காரணம் என பெரும்பாலான பிரான்சு மக்கள் நம்புகின்றனர் என்று CSA நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. நவம்பர் 7 முதல் 10 வரை ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற 1,011 பேரில் 56% பேர் குடியேற்றம் பாதுகாப்பின்மைக்குப் “முக்கிய பங்கு” வகிக்கிறது எனவும், 19% பேர் “சிறிய பங்கு” எனவும், 13% பேர் எந்த பங்கும் இல்லை […]
வலதுசாரி தலைவர் மரீன் லெ பென் மீது விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக Pas-de-Calais மாகாண கவுண்சிலர் பதவி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் பிரான்சின் உயர்ந்த நிர்வாக நீதிமன்றமான Council of State திங்கட்கிழமை அந்த மேல்முறையீட்டை நிராகரித்தது. மோசடி குற்றச்சாட்டில் லெ பென் தண்டிக்கப்பட்டதுடன் தேர்தலில் நிற்கத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அவர் வகித்திருந்த உள்ளூர் நிர்வாக பதவி ரத்து செய்யப்பட்டது நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அவர் 2024 […]
அரசு பொதுச் சுகாதார சேவைகளுக்கான தனிநபர் செலுத்த வேண்டிய தொகைகளை உயர்த்தும் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலம், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய தொகை இரட்டிப்பாக அதிகரிக்கும். புதிய விகிதங்களின் மூலம் வருடத்திற்கு சுமார் €2.3 பில்லியன் வருவாய் பெறப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் படி, மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான தனிநபர் பங்கு €1 இலிருந்து €2 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல், மருத்துவ போக்குவரத்துக்கான செலவு €4 இலிருந்து […]
பிரான்ஸ் சமூக பாதுகாப்பு நிதி மசோதாவில் (PLFSS) பெண்களுக்கு ஓய்வூதிய கணக்கில் இரண்டு முக்கிய நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் எதிர்கொள்ளும் வேலை இடைவெளி மற்றும் வருமானக் குறைபாடுகளை ஈடு செய்யும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. முதலாவது, குழந்தை பிறந்ததற்கான கூடுதல் காலாண்டு கிரெடிட்கள் (trimestres) இனிமேல் முன்கூட்டியே ஓய்வு பெற பயன்படுத்த முடியும். பெண்கள் குழந்தை காரணமாக பெற்றிருக்கும் இந்த காலாண்டுகளில் இருந்து அதிகபட்சம் 2 காலாண்டுகள் வரை, நீண்ட […]
இணையத்தில் தற்கொலைக்கு ஊக்கம் அல்லது ஆபத்தான உள்ளடக்கங்களை பகிர்வது சட்ட விரோதமானது. பிரான்ஸ் குற்றச்சாட்டு சட்டம் (Code Pénal) Article 223-13 மற்றும் Article 223-14 படி தற்கொலை தூண்டுதல் குற்றமாகவும் தண்டனைக்குரியதாகவும் கருதப்படுகிறது. கீழ் காணும் சட்டங்கள் ஊடக.. French Penal Code — Article 223-13 French Penal Code — Article 223-14 பின்வரும் வழிமுறைகளில் முறைப்பாடு செய்யலாம்? 1) PHAROS — இணைய குற்றச்சாட்டு புகார் தளம் இது பிரான்ஸ் அரசின் […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வழக்கு நடுவர் அலுவலகம், சீன நிறுவனமான TikTok பயன்பாட்டின் ஆல்கொரிதம் குறித்து முன்னோட்ட விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளது. இது பிரான்ஸ் தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஆர்த்தர் டெலபோர்ட் (PS) தலைமையிலான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து வந்துள்ளது. அவரது அறிக்கையில் TikTok இன் பரிந்துரைக் கணினி அமைப்பு (Algorithm) சில மன அழுத்தம் அல்லது பலவீனம் உள்ள சிறார்களை தற்கொலையின்பால் தள்ளக்கூடும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாரிஸ் பொது வக்கீல் […]
பிரான்ஸ் நாட்டின் லாண்ட்ஸ் (Landes) மாகாணத்தில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய முயற்சி இந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. சாலை பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு “மிகவும் கடுமையானது” என கூறப்படுகிறது. லாண்ட்ஸ் மாகாண ஆட்சியர் கில்லஸ் கிளாவ்ரூவெல் (Gilles Clavreul) தெரிவித்ததாவது: “இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 3,200 பேர் மொபைல் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. எனவே இனி குற்றச்செயல்களின் […]
பிரான்ஸ் சமூக பாதுகாப்பு அமைப்பில், “Plafond Annuel de la Sécurité Sociale (PASS)” எனப்படும் வருடாந்திர உச்சவரம்பு என்பது, ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்தில் இருந்து சமூக நலன்கள் மற்றும் கட்டணங்கள் கணக்கிடப்படும் மிக அதிகபட்ச வரம்பு ஆகும். PASS எதற்காக பயன்படுத்தப்படுகிறது? PASS பல்வேறு சமூக நலன்கள் மற்றும் கட்டண கணக்கீடுகளில் அடிப்படையாகப் பயன்படுகிறது. PASS எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று PASS புதுப்பிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் சராசரி […]