ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்த நிலையில் புகைப்படம் எடுக்கும் முயற்சியின் போது இருவரும் தவறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இரு மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்த சோகச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






























