திட்டத்தின் படி தஞ்சம் கோரி பின்னர் அகதி அந்தஸ்து Refugee Status பெற்றவர்களில் குறிப்பிட்ட வருமான வரம்பை மீறி சம்பாதிக்கும் பெரியவர்கள் மட்டுமே இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஆரம்பக் கணக்கீட்டின்படி ஒருவர் சுமார் £10,000 வரை தவணை முறையில் செலுத்த வேண்டியிருக்கலாம். குழந்தைகளுக்கு இந்த விதி பொருந்தாது என்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் வறுமையில் தள்ளப்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் தொகை முழுமையாக செலுத்தப்பட்ட பின்னரே, அவர்கள் பிரிட்டனில் நிரந்தர குடியேற்ற (Settlement) விண்ணப்பத்திற்கு தகுதி பெறும் வகையில் சட்டம் மாற்றப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி கடந்த காலத்தில் தஞ்சம் பெற்றவர்களுக்கு பின்வாங்கி (Retrospective) அமல்படுத்தப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு, ஆண்டுதோறும் அகதிகளுக்கான தங்குமிடம் மற்றும் ஆதரவு செலவாக அரசுக்கு ஏற்படும் பல பில்லியன் பவுண்ட் செலவை குறைப்பதே நோக்கம் என அரசு விளக்கியுள்ளது. ஆனால், அகதிகள் நல அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்தத் திட்டம் போரும், துன்புறுத்தலும் காரணமாக தஞ்சம் நாடி வரும் மக்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.





























