இங்கிலாந்து அரசு – ஆபத்தான ஆபாச உள்ளடக்கத்திற்கு கடும் கட்டுப்பாடு.

இங்கிலாந்து அரசு இணையத்தில் பரவிவரும் தீங்கு விளைவிக்கும் ஆபாச உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக குடும்ப உறவுகளை தவறாக சித்தரிக்கும் (incest போன்ற) ஆபாச காட்சிகள் மற்றும் சிறார்களைப் போல நடித்து உருவாக்கப்படும் காட்சிகள் ஆகியவை இனி சட்டப்படி குற்றமாக்கப்பட உள்ளன.

இத்தகைய உள்ளடக்கங்களை உருவாக்குவது, வைத்திருப்பது அல்லது பகிர்வது கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் தளங்கள் இதுபோன்ற உள்ளடக்கங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கு பெரிய அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாக்கவும் வன்முறை மற்றும் தவறான பாலியல் உள்ளடக்கத்தின் பரவலை தடுக்கவும் கொண்டுவரப்பட்டதாக அரசு விளக்கியுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading