சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கு பதிலளித்து துருக்கிக்கு எந்த ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்றும் அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

துருக்கி ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்துவதால் தற்போதைய அமெரிக்க சட்டங்களின் கீழ் அந்நாட்டுக்கு F-35 போர் விமானங்களை விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருந்தாலும் அந்தத் தடையை நீக்கி விற்பனைக்கு அனுமதி வழங்கும் வாய்ப்பை தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

மேலும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தனது நண்பர் என்றும் அமெரிக்கா எந்த நாட்டுக்கு என்ன விற்க வேண்டும் என்பதை வெளிநாட்டு தலைவர்கள் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை துருக்கி இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு வழங்கும் நாடல்ல என்பதையும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளமை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்