பின்னர் திடீரென முதியவரை தாக்கி அவர் வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




























