2025 யால மற்றும் மகா பருவங்களில் அரசு மொத்தமாக ரூ.16 பில்லியன் மதிப்பிலான நெல்லை கொள்வனவு செய்துள்ளது. தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிடங்குகளில் சுமார் 120,000 மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளது.அதில் 60,000 மெட்ரிக் டன் நெல்லை திறந்த டெண்டர் முறையில் சந்தைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலும் 20,000 மெட்ரிக் டன் நெல்லை சதொசா நிறுவனத்திற்கு வழங்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேலும் தேவைக்கேற்ப கூட்டுறவு சங்கங்கள், கமநல அபிவிருத்தித் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கிடங்குகளை பயன்படுத்துவதும் தனியார் கிடங்குகளை குத்தகைக்கு பெறுவதும் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.Sri Lanka News
யால நெல் கொள்வனவு ஜூலை 15 முதல் ஆரம்பம்
Sri Lanka News,2025 யால பருவத்திற்கான அரசின் நெல் கொள்வனவு நடவடிக்கை ஜூலை 15 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.2024 ஆம் ஆண்டில் அரசு விவசாயிகளை அரசுக்கு நெல் விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டபோதும் அதற்கு குறைந்தளவிலேயே பதில் கிடைத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவைத் தொடங்கும் வரை விவசாயிகள் தங்களது அறுவடையை விற்பனை செய்யாமல் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.































