இத்தாலி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மிக தீவிரமாக இத்தாலி அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அல்பேனியாவுடன் இத்தாலி அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இத்தாலி நாட்டிற்கு வரும் சட்ட விரோத குடியேற்றவாசிகளை அல்பேனியாவில் உள்ள அகதிகள் மையங்களுக்கு அனுப்பி அங்கு தங்க வைத்து அவர்களது புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான விசாரணைகளை நடத்தி அதன் பின்னர் குறிப்பிட்ட குடியேற்றவாசிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் அல்லது புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனினும் இந்த முடிவு தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த 2025 மார்ச் மாதத்தில் இதற்கான அங்கீகாரத்தினை இத்தாலிய அரசு வழங்கியுள்ளது. அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களை நாடு கடத்தல் மையங்களாக பயன்படுத்துவதற்கான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இத்தாலியில் புகழிடம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் அனைவரும் அல்பேனியாவின் அகதிகள் முகாம்களில் இருந்து அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது எளிதாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தாலி அரசு கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் அகதிகளை தங்க வைக்கும் காலத்தினை 18 மாதங்களாக நீடிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த நீட்டிப்பு அகதிகளை நாடு கடத்துவதற்கான தேவையான நேரத்தை வழங்குகிறது, மேலும் இந்த நடவடிக்கையினால் இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன் அந்நாட்டு சட்டம் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் சிறப்பாக இயங்குவதற்கும் இது வழி வகுக்கின்றது. இத்தாலி அரசு சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் பல தரப்புகளினால் அங்கீகரிக்கப்பட்டாலும் இந்த நடவடிக்கை மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களினது விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading