வெளிநாட்டுக்கு செல்வதற்கு பணம் செலுத்த முன்பு உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வேளையில் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்து கொண்டு அதன் பின்னரே நீங்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கான ஆயத்தங்களை அதாவது பணம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்த பின்னர் உங்களது பயணத்திற்கு ஏற்ற வகையில் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான சட்ட திட்டத்திற்கு உட்பட்ட அளவிலான கட்டுப் பணத்தினை செலுத்துவதற்கு இணங்கி கொள்ளுங்கள். குறிப்பாக இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நிலைமை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகள் வெளிநாட்டை நோக்கிய படையெடுப்பை தற்போது அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் இந்த சூழ்நிலையில் இலங்கையில் செயல்படுகின்ற பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தங்களை ஒரு சிறந்த வேலை வழங்கினராக சமூகத்தில் அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரதிபலித்துக் கொண்டு வெளிநாட்டு கனவுடன் வேலைக்காக செல்லும் இளைஞர்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு இலங்கை அரசின் ஒரு நடவடிக்கையாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தின் அவசர இலக்கம் “1989” என்ற இலக்கத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியிடத்தை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை அல்லது உங்களுடைய குறை நிறைகளை கேட்டு அறிந்து முக்கியமாக குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களின் தகவல்களை கேட்டு அறிந்து கொண்டு அதன் பிற்பாடு உங்களுக்குரிய குறித்த நாட்டிற்கான குறித்த வேலைக்கான கட்டுப்பனம் எவ்வளவு என்பதை சரியான முறையில் அறிந்து கொண்டு அதன் பின்னரே குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவுக்கான கட்டுப் பணத்தினை செலுத்துங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் குறித்த முகவரால் அல்லது உதவி செய்யும் பிரிதொரு நபரால் உங்களுடைய பணத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்தினை உங்களால் குறைத்துக் கொள்ள முடியும்.
சமீப காலமாக இலங்கையில் இருக்கின்ற பொருளாதார சூழ்நிலை கருத்தில் கொண்டு வெளிநாட்டுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது இந்த சூழ்நிலையில் இவ்வாறான ஏமாற்றுக்காரர்கள் மக்களது நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனவே இனிவரும் காலங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக உங்களுக்கு போதிய அளவு அறிவின்மை இருப்பதன் காரணமாக இந்த அவசர இலக்கத்தை “1989” தொடர்பு கொண்டு குறித்த முகவர் தொடர்பான சகல தகவல்களையும் பெற்றறிந்த பின்னர் உங்களுடைய பயணம் தொடர்பான நடவடிக்கைகளை முக்கியமாக கட்டுப்பணத்தை முகவரிடம் செலுத்துங்கள்.


































