30 மருத்துவ மையங்களில் மூன்று ஆண்டுகள் ஆய்வு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் ஆட்சேர்ப்பு தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள 30 மையங்களில் இந்த ஆய்வு நடைபெற உள்ளது. வழக்கமாக ஒரு மாமோகிராமை இரண்டு NHS நிபுணர்கள் பரிசோதிப்பார்கள். ஆய்வில், அவர்களில் ஒருவரின் பணியை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மேற்கொள்ளும்.
50 முதல் 71 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பகப் பரிசோதனை அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் பரிசோதனைக்கு செல்கின்றனர். ஆய்வில் பங்கேற்பது கட்டாயமல்ல; வழக்கமான பரிசோதனை அழைப்புடன் இதுகுறித்த தகவல் வழங்கப்படும்.
AI breast cancer screening trial-ல், செயற்கை நுண்ணறிவு படங்களை மனித நிபுணர்களுக்கு அனுப்புவதற்கு முன்போ அல்லது பின்னரோ மதிப்பிடும் வகையில் இரு முறைகள் பரிசோதிக்கப்படுகின்றன. தேவையற்ற மேலதிகப் பரிசோதனைக்காக பெண்கள் அழைக்கப்படுவதையும், அறிகுறிகளை ஏற்படுத்தாத மிதமான நோய்கள் அதிகமாகக் கண்டறியப்படுவதையும் தவிர்ப்பது முக்கிய நோக்கமாகும்.
1.1 கோடி பவுண்ட் செலவில் நடைபெறும் இந்த ஆய்வு, சுமார் மூன்று ஆண்டுகள் நீடிக்கும். நான்கு செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. மார்பகப் புற்றுநோய் ஆண்டுதோறும் சுமார் 59,000 பெண்களுக்கு கண்டறியப்படுகிறது; வழக்கமான மாமோகிராம்கள் மூலம் அவற்றில் சுமார் மூன்றில் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்படுகிறது.






























