நாட்டின் சட்ட அமைப்பு, சட்டத்தரணிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கவலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளது. சட்டத்துறையைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். BASL meeting
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய சட்டத்துறையை பாதிக்கும் முக்கியமான விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை நிர்வாகக் குழு மாத்திரம் எடுக்க முடியாது எனவும், அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பும் அவசியம் எனவும் முன்னதாக தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணிகள், நீதித்துறை மற்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசேட பொதுக்கூட்டம் சட்டத்துறை வரலாற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதுடன் நாட்டின் சட்ட அமைப்பு தொடர்பான பல்வேறு விடயங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அமையும்.




























