ஜனவரி 31 அன்று ஹோட்டலை விட்டு சான்டா குரூஸுக்குச் செல்ல வேண்டிய நிலையில், பெற்றோரின் தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையைத் தொடர்புகொண்டனர்.
சிசிடிவி காட்சிகளும் விசாரணை முடிவும்
பிப்ரவரி 13 அன்று வெளியான சுமார் நான்கு நிமிட லிஃப்ட் சிசிடிவி காட்சிகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன. அந்தக் காட்சிகளில் எலிசா பல லிஃப்ட் பொத்தான்களை அழுத்துவதும், வெளியே யாரையோ அஞ்சுவது போல நடப்பதும் பதிவாகியிருந்தது.
பிப்ரவரி 19 அன்று பராமரிப்பு ஊழியர் சாண்டியாகோ லோபஸ், மொட்டை மாடியில் இருந்த 1,000 கேலன் கொள்ளளவு கொண்ட நீர்த் தொட்டிகளில் ஒன்றில் எலிசாவின் சடலத்தைக் கண்டுபிடித்தார். அவரது ஆடைகளும் உடைமைகளும் தொட்டிக்குள் இருந்தன.
அதிகாரபூர்வ பிரேதப் பரிசோதனையில் வெளிப்புறக் காயங்கள், பலாத்காரத் தடயங்கள், விஷம் அல்லது தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்யவில்லை; விபத்தால் உயிரிழந்ததாக முடிவு செய்யப்பட்டது. மேலும், பைபோலார் கோளாறுக்கான மருந்துகளை அவர் முறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டது. Elisa Lam death தொடர்பான இணையக் கோட்பாடுகள் தொடர்ந்தாலும், விசாரணை அதிகாரபூர்வமாக முடிக்கப்பட்டது.































