பெண்ணின் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்
2023ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் இந்திரதேவ் மகாராஜின் சொற்பொழிவுகளைப் பார்த்த பின்னர் அந்தப் பெண் அவரைத் தொடர்புகொண்டதாகத் தெரிவித்துள்ளார். மும்பை சாந்தாகுருஸில் நடைபெற்ற சத்சங்கத்தில் பங்கேற்று தீட்சை பெற முயன்ற பின்னர் இருவருக்கும் தொடர்பு அதிகரித்ததாகவும், தனது தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி அவர் நம்பிக்கையைப் பெற்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
விருந்தாவன் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது, நள்ளிரவில் தன்னை அறைக்கு அழைத்து கதவைப் பூட்டிய மதபோதகர் கட்டாயப்படுத்தி உறவு வைத்ததாகப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இரவில் வெளியே சென்றது குறித்து மருந்து வாங்கச் சென்றதாகக் கூறும்படி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
வீடியோ அழைப்புகளின்போது ஆடைகளைக் களையச் செய்து ஆபாசமான செயல்களைப் பதிவு செய்ததாகவும், அவற்றை வெளியிடுவதாக மிரட்டி தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “நானே கடவுள்; நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்று மதபோதகர் கூறியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவங்கள் 2023ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்பட்டாலும், இந்த Mathura ashram sexual assault case தொடர்பாக சாமியார் இதுவரை கைது செய்யப்படவில்லை. மதுராவில் தனது புகார் புறக்கணிக்கப்பட்டதாகவும், சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தலையிட்ட பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருப்தி தேசாய் கோரிக்கை விடுத்துள்ளார்.































