சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுமக்களின் புகார்கள் முதலில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் மோசமான அழைப்பை மேற்கொண்ட நிறுவனத்தை அதிகாரிகள் கண்டறிந்து, அழைப்பு சம்மதமின்றி மேற்கொள்ளப்பட்டதா என்பதை நிரூபித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால் சட்டத்தின் முழு விளைவு வெளிப்படுவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
மாதந்தோறும் 20,000-க்கும் மேற்பட்ட புகார்கள்
அழைப்புகளை கண்காணித்து வரும் செந்தோ, தொலைபேசி விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 2.3 கோடி எண்களைப் பட்டியலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவற்றில் சில எண்கள் விளம்பர அழைப்புகளுக்காக ஒதுக்கப்பட்டவை எனவும், அவற்றைத் தானாகத் தடுக்கும் செயலியை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அரசின் புகார் தளத்தில் ஒவ்வொரு மாதமும் 20,000-க்கும் மேற்பட்ட முறையீடுகள் பதிவாகின்றன. விதிகளை மீறும் விளம்பர அழைப்பாளர்களுக்கு அதிகபட்சம் 3.75 லட்சம் யூரோ அபராதம் விதிக்கலாம். எனினும், தானியங்கி அழைப்பு மையங்கள் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான அழைப்புகளை மேற்கொள்ள முடிவதால், இந்த அபராதம் போதிய தடுப்பாக இல்லை என தொலைத்தொடர்பு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் தொலைபேசி விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக 1.1 கோடி யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், France telemarketing law நடைமுறைக்கு வந்த பிறகும் பொதுமக்களின் தொந்தரவு தொடர்கிறது.































