மேலும் 2016 ஆம் ஆண்டு நாரம்மலை பகுதியில் உள்ள கோவிலொன்றில் துறவி மற்றும் அவரது உதவியாளரை தாக்கியதுடன் அங்கிருந்த சாய்க்யாவையும் சேதப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்ட மற்றொரு வழக்கின் காரணமாகவும் அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போது 2,400-க்கும் அதிகமான குறுகிய கால கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்களும் அங்கு இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் ஆபத்தான கைதிகளை தனித்தனி உயர் பாதுகாப்பு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



























