தற்போதைய மழை நிலை காரணமாக மலைச்சரிவுகளில் திடீர் நிலச்சரிவுகள் நிலம் உள்வாங்குதல், மரங்கள் சாய்வு, மண் வெடிப்புகள் அல்லது புதிய நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் NBRO கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு – மக்கள் அவதானமாக இருக்குமாறு NBRO அறிவுரை
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு முன்னதாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை (16) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக National Building Research Organisation அறிவித்துள்ளது. இதன்படி Badulla, Colombo, Galle, Gampaha, Kalutara, Kandy, Kegalle, Kurunegala, Matale, Matara, Monaragala, Nuwara Eliya மற்றும் Ratnapura மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.































