மேலும், நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளின் மரணங்களும் விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் காயமடைந்த கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் கவலைக்குரியது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஜூலை 7ஆம் தேதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மேற்கொண்ட திடீர் கண்காணிப்பு விஜயத்தின் போது ஆணைக்குழுவினருக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்டமை சட்ட மீறலாகும் என சுட்டிக்காட்டியுள்ள HRCSL அதற்கான விளக்கமளிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமைப் பொறுப்பதிகாரிக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.



























