அத்துடன் தொழில் முயற்சிகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் இந்த திட்டம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.நவீன மின்சார உற்பத்தி மற்றும் விநியோக அமைப்புகளின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வடக்கு தீவுகளின் அபிவிருத்தியில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.24 மணி நேர மின்சாரம் கிடைப்பதன் மூலம் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவு மக்களின் பல வருடக் கோரிக்கை நிறைவேறியுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
வடக்கு தீவுகளுக்கு பெரும் வரம்இனி 24 மணி நேர மின்சாரம்
வடக்கு கடல் தீவுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நனவாகும் வகையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் கிடைத்த இந்த தீவுப் பகுதிகளில் இனி பகல்-இரவு பாராமல் தொடர்ச்சியான மின்சார வசதி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக மாணவர்கள் இரவு நேரங்களில் தடையின்றி கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுவதுடன் மருத்துவ நிலையங்களின் சேவைகளும் மேலும் வலுப்பெறவுள்ளன.
































