நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் தேசிய திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் பயனடைவார்கள் என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் கலந்துரையாடல்

நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற பாடசாலை மாணவிகளின் சுகாதாரம் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.44 பில்லியன் ஒதுக்கீடு

கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் ரூ. 1.44 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

வருடாந்திர வவுச்சர் வழங்கல்

திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பாடசாலை மாணவிகள்
🔹 ரூ. 1,440 மதிப்புடைய வருடாந்திர வவுச்சரை
🔹 சானிட்டரி நப்கின்கள் வாங்குவதற்காக பெறுவார்கள்.

இந்த வவுச்சர்கள் மாகாண கல்வி அலுவலகங்கள் மூலம் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading