சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையின் போது, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தது. குறித்த வழக்கு, கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், வழக்கு விசாரணை நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்ததாகக் கருதி, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading