சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கொழும்பு கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிடியாணை, அர்ச்சுனா ராமநாதன் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

தற்போது, அவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்துவருகிறது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading