சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி ரவுடி சுள்ளான் மதன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வீடியோக்கள் பரவின. “இன்னும் பல தலைகள் சிதறும், ரத்த ஆறு ஓடும்” போன்ற மிரட்டல் வாசகங்களுடன் ரீல்ஸ் பதிவுகள் வெளியிடப்பட்டன.
வன்முறைப் பதிவுகளுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை
காவல்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சில இளைஞர்கள் தங்களுக்கும் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்றும், பணம் தருவதாகக் கூறியதால் மற்றவர்கள் வழங்கிய வீடியோக்களைத் தங்கள் கணக்குகளில் பதிவிட்டதாகவும் தெரிவித்தனர். பதிவுகளில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் மற்றும் பின்னணி இசை குறித்தும் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை வன்முறையைத் தூண்டிய 41 Instagram கணக்குகள் மற்றும் 3 Facebook கணக்குகள் என மொத்தம் 44 Sivaganga social media accounts முடக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பதிவுகளுடன் தொடர்புடைய 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுள்ளான் மதன் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளக் கண்காணிப்பை 24 மணி நேரமும் தீவிரப்படுத்தியுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.






























