மாதாந்த அடிப்படையிலும் சுற்றுலா வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 மே மாதத்தில் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்த நிலையில் ஜூன் மாதத்தில் அது 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. மேலும் 2025 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாத சுற்றுலா வருமானமும் குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை 169.5 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானத்தைப் பெற்றிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.Sri Lanka News
இதேவேளை வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பணப்பரிமாற்றங்களிலும் ஜூன் மாதத்தில் மாதாந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 2026 மே மாதத்தில் 847 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் கிடைத்த நிலையில் ஜூன் மாதத்தில் அது 695 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. இது ஒரு மாதத்தில் 152 மில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும்.
எனினும் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இலங்கை 4,604.8 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இது 3,738 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதன் மூலம் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு பணப்பரிமாற்ற வரவு 866.8 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
































