இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் பணியாற்றவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த வேலைத்திட்டம் முறையான மற்றும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இந்த ஆண்டில் இதுவரை 2,500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலும் 6,500 பேருக்கான வேலைவாய்ப்புகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். அதேவேளை புதிய தொழில்துறையில் கூடுதலாக 1,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் மூலம் 10,000 தொழிலாளர்களை அனுப்பும் இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதன் மூலம் குறைந்த செலவில் பாதுகாப்பாகவும் நம்பகமான முறையிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் எனவும் அமைச்சர் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.






























