September 11, 2026
Breaking News
அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் குழந்தைகள் தொடர்பான குடியேற்ற வழக்குகளில் இங்கிலாந்தில் தொடரும் சட்ட மாற்றங்கள் 2025ல் 3,000க்கும் மேற்பட்ட திறன் தொழிலாளர் அனுமதிகள் ரத்து விசா தடையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் பிரிட்டன் குடியேற்ற விவகாரங்களை அலசும் மாதாந்திர பாட்காஸ்ட் பிரிட்டன் வருகை விசாவில் புதிய பயணச் சரிபார்ப்புகள்; விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை EU குடிமக்கள் பயணக் கட்டுப்பாடுகள் வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு அனுமதி பிரிட்டனில் நாடுகடத்தல் வழக்குகளில் தொடரும் நீதிமன்ற ஆய்வுகள் காஞ்சிபுரத்தில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு: விறகு வியாபாரி மீது வழக்கு ஐக்கிய இராச்சியத்தில் புகலிட மேல்முறையீட்டு நிலுவை 80,000-ஐ கடந்தது அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் குழந்தைகள் தொடர்பான குடியேற்ற வழக்குகளில் இங்கிலாந்தில் தொடரும் சட்ட மாற்றங்கள் 2025ல் 3,000க்கும் மேற்பட்ட திறன் தொழிலாளர் அனுமதிகள் ரத்து விசா தடையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் பிரிட்டன் குடியேற்ற விவகாரங்களை அலசும் மாதாந்திர பாட்காஸ்ட் பிரிட்டன் வருகை விசாவில் புதிய பயணச் சரிபார்ப்புகள்; விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை EU குடிமக்கள் பயணக் கட்டுப்பாடுகள் வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு அனுமதி பிரிட்டனில் நாடுகடத்தல் வழக்குகளில் தொடரும் நீதிமன்ற ஆய்வுகள் காஞ்சிபுரத்தில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு: விறகு வியாபாரி மீது வழக்கு ஐக்கிய இராச்சியத்தில் புகலிட மேல்முறையீட்டு நிலுவை 80,000-ஐ கடந்தது

Tag: Jaffna News

செம்மணி 300ஐ அண்மித்தது

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 17ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (05) நடைபெற்ற நிலையில் மேலும் 13 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்கனவே கண்டறியப்பட்ட எச்சங்களில் இருந்து மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமான என்புக்கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் செம்மணி புதைகுழியில் இதுவரை 296 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 290 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து […]

எழுச்சி பாடல் வழக்கு இளைஞன் 14 நாட்கள் விளக்கமறியலில்

சாவகச்சேரியில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இளைஞன்எழுச்சி பாடல் பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில் பாடலை பாடி அந்த பாடலுக்கு தானே இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளின் […]

வவுனியாவில் கோர விபத்து

வவுனியாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையின் கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில்,வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலாளர் இமால்ட்டா சுகுமாரின் மகனான சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]

யாழ் பொது நூலகத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம் செய்து நூலகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார். விஜயத்தின் போது தனது மனைவியுடன் நூலக வளாகத்தில் அமைந்துள்ள டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நூலகத்தை பார்வையிட்ட அவர் ஒரு தொகை நூல்களை நூலகத்திற்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி யாழ்ப்பாண […]

அனலைதீவுக்கு கடற்படையின் சிறப்பு படகில் கொண்டு செல்லப்பட்ட பேருந்து

யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுப் பகுதிகளில் ஒன்றான அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடற்படையின் சிறப்பு படகின் மூலம் அனலைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக தீவுக்கு அனுப்பப்பட்ட இந்த பேருந்து இனிமேல் அனலைதீவு பகுதிக்குள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இதன் மூலம் அங்குள்ள மக்களின் நாளாந்த பயண நடவடிக்கைகள் மேலும் இலகுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் […]

செம்மணி அகழ்வில் சிறுவர் என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் 13ஆம் நாள் அகழ்வின்போது முக்கியமான புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருந்த இரு என்புக்கூடுகளும் சிறுவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் என்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மொத்தமாக 8 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் மேலும் ஒரு என்புக்குவியல் கண்டறியப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு […]

பொன்.சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பு

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாகக் கருதப்படும் பொன்.சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் ஈகைச்சுடர் ஏற்றி நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறைகளுக்கும் கல்வித் தரப்படுத்தல் கொள்கைக்கும் எதிராக போராடிய பொன். சிவகுமாரன் தமிழ் மாணவர் பேரவையில் […]

லலித் – குகன் வழக்கு கோட்டாபயவுக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே நிகழ்நிலை (Online) வழியாக சாட்சியம் வழங்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன் யாழ்ப்பாணத்தின் ஆவரங்கால் பகுதியில் மர்மமாக காணாமல் ஆக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் 2012ஆம் ஆண்டு ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கு […]

செம்மணியில் தாயத்துடன் மீட்கப்பட்ட என்புக்கூடு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் இரண்டாம் பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் காணப்பட்ட மனித என்புக்கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கிய இந்த அகழ்வு நடவடிக்கைகள் மே 9ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்ற பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட அகழ்வின் போது குறித்த என்புக்கூடு கண்டறியப்பட்டது. அதேவேளை புதைகுழி பகுதியில் செத்தல் […]

சிகிச்சை செலவுக்கு மீதமான நிதி மாவீரர் குடும்பங்களுக்கு – சிவாஜிலிங்கம் அறிவிப்பு

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அவசர அறுவைச் சிகிச்சைக்காக மக்களிடம் உதவி கோரியிருந்த நிலையில் குறுகிய காலத்திற்குள் அவரது முதற்கட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்குத் தேவையான நிதி திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அறுவைச் சிகிச்சை முழுமையாக நிறைவடைந்த பின்னர் சிகிச்சைச் செலவுகளுக்குப் பின் எஞ்சும் நிதி […]