தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அவசர அறுவைச் சிகிச்சைக்காக மக்களிடம் உதவி கோரியிருந்த நிலையில் குறுகிய காலத்திற்குள் அவரது முதற்கட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்குத் தேவையான நிதி திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அறுவைச் சிகிச்சை முழுமையாக நிறைவடைந்த பின்னர் சிகிச்சைச் செலவுகளுக்குப் பின் எஞ்சும் நிதி சமூக நலன் சார்ந்த பணிகளுக்கும் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் அவர்களின் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு உதவி வழங்கியவர்கள் எந்தவித விசாரணை அழுத்தங்களுக்கும் உள்ளாகக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவதாகவும் பொருத்தமான நேரத்தில் உதவியளித்தவர்களின் விவரங்களை வெளிப்படையாக வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.





Leave a Reply