Tag: Tamil News
யாழ்ப்பாணத்தின் தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றிருந்த இரு தமிழ் இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் விகாரைக்கு அருகாமையில் காணி உரிமையாளர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாகக் கூறி அப்பகுதிக்குள் சென்றதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் அவர்களிடம் […]
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்ற பின்னர் அவர்கள் தொடர்பின்றி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் மீனவர் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கடற்படை மீனவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடலின் மோசமான நிலைமை மற்றும் காலநிலை காரணமாக […]
இலங்கை செய்திகள்வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளில் வேசாக் விளக்குகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வீதியோர கடைகள் மற்றும் தற்காலிக சந்தைகளில் வண்ணமயமான விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். குடும்பங்களுடன் வந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிலையங்களை அலங்கரிக்க பல்வேறு வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்ட வேசாக் கூடுகளை தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கூடிய உள்ளூர் தயாரிப்புகளுக்கு இந்த ஆண்டு […]
UK Visa..பிரிட்டனுக்கான Visa மற்றும் ETA விண்ணப்ப உதவி வழங்கும் தனியார் இணையதளத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுமார் 100,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் Selfie புகைப்படங்கள் இணையத்தில் வெளிப்படையாக அணுகக்கூடிய நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை முதலில் வெளிப்படுத்தியது தொழில்நுட்ப செய்தி தளம் TechCrunch ஆகும். அறிக்கையின் படி, UK Visa Portal எனும் third-party சேவை Amazon S3 cloud storage bucket ஒன்றை சரியான பாதுகாப்பு […]
French Drivers, பிரான்சில் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஓட்டுநர்களுக்கு எதிராக மேலும் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன்படி புதிய வேகக் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அபராதங்கள் நகரங்களில் குறைந்த வேக வரம்புகள் மற்றும் AI தொழில்நுட்ப கண்காணிப்புகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் தகவலின்படி 2025 மற்றும் 2026 காலகட்டங்களில் French Drivers சாலை விபத்து மரணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் கடந்த […]
Paris Saint-Germain மற்றும் Arsenal F.C. அணிகள் மோதும் UEFA Champions League இறுதிப்போட்டியை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டியை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 22,000 போலீஸ் மற்றும் ஜெண்டார்ம்கள் பாதுகாப்பு பணிக்காக களமிறக்கப்படவுள்ளதாக பாரிஸ் போலீஸ் தலைவர் Laurent Nuñez அறிவித்துள்ளார். இதில் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டும் 8,000 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் பாரிஸில் […]
France immigration, பிரான்சில் சட்டபூர்வ (Legal) குடியேற்றத்தை தற்காலிகமாக மூன்று ஆண்டுகள் நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கு பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த விவாதம் மீண்டும் தீவிரமானதற்குக் காரணமாக பிரான்ஸ் நீதி அமைச்சர் Gérald Darmanin சமீபத்தில் பிரான்ஸ் தற்போது ஒருங்கிணைப்பு மற்றும் சமூக உட்கொள்ளும் திறனின் எல்லையை அடைந்துவிட்டது என்று கூறி சட்டபூர்வ குடியேற்றத்திற்கு மூன்று ஆண்டு moratorium (தற்காலிக நிறுத்தம்) பரிந்துரைத்தது குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் அரசியல் […]
அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மதத்தின் பெயரில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் உள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த […]
யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவத்தினர் எந்தவிதமான சாதகமான பதிலும் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு சில விடயங்கள் “பரிசீலிப்போம்” என தள்ளிப்போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை கூட்டத்திற்குப் பின்னர் கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியது […]
வவுனியா – ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மாட்டுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென வீதியை குறுக்கே கடந்த மாட்டுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடனும் மோதியதில் பலத்த சேதமடைந்தது. விபத்தில் கடுமையாக காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு […]