சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவத்தினர் எந்தவிதமான சாதகமான பதிலும் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு சில விடயங்கள் “பரிசீலிப்போம்” என தள்ளிப்போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டத்திற்குப் பின்னர் கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும் என்றும் அவர் விமர்சித்தார். மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சில பிரதிநிதிகள் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கூட கலந்துரையாடலுக்கு அழைக்கப்படாதது கேள்விகளை எழுப்புவதாகவும் மூடிய அறைக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து வெளியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்