போலி முகவரிகளில் அனுப்பப்பட்ட பார்சல்கள்
மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. வலி நிவாரணத்துக்குப் பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
தேனி மாவட்டம் கண்டமனூர் மற்றும் தென்கரைப் பகுதிகளுக்கு வந்த சந்தேகத்துக்குரிய வெளிமாநில பார்சல்களில் போதை மாத்திரைகள் இருந்தன. அவை போலிப் பெயர்கள் மற்றும் முகவரிகளில் அனுப்பப்பட்டிருந்ததால், போலீஸார் அஞ்சல்துறை மற்றும் தனியார் கூரியர் நிறுவனங்களுடன் இணைந்து கண்காணிப்பை மேற்கொண்டனர்.
பார்சல்களின் மூலத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில், அவை ஹரியானா மாநிலம் அம்பாலாவிலிருந்து அனுப்பப்பட்டதை உறுதி செய்தனர். கடந்த ஓராண்டில் 588 சந்தேகத்துக்குரிய பார்சல்கள் பதிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் 11 பார்சல்கள் தமிழ்நாட்டுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Tamil Nadu drug tablet network வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் மகேந்திர சிங் வஹ்ட்டும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் ஜம்மு-காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சுனில் குமாரும் நவம்பர் 2-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.


































