உயிரியல் மற்றும் இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திட்டங்கள்
OpenAI மற்றும் Anthropic ஆகிய நிறுவனங்கள், UK AI Biosecurity Lab பயன்படுத்துவதற்காக தங்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான £200 மில்லியன் மதிப்பிலான கிரெடிட்களை வழங்க உள்ளன. AI அமைச்சர் கனிஷ்கா நாராயண், இந்த UK AI Biosecurity Lab உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கும் முக்கியமான உலகளாவிய நிறுவனமாக இருக்கும் என்றார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடையும் நிலையில், இணையத் தாக்குதல்கள் மற்றும் உயிரியல் அபாயங்கள் உள்ளிட்ட உருவாகும் அச்சுறுத்தல்களுக்கு முன்கூட்டியே தயாராக இருப்பதே இதன் நோக்கம் என அவர் கூறினார்.
பிரிட்டனின் AI Security Institute-க்கு கூடுதலாக £120 மில்லியன் ஒதுக்கப்படுகிறது. தேசிய இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் “National Cyber Shield” திட்டத்துக்கு £60 மில்லியனும், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் உள்ள இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறியும் National Exposure and Real-Time Vulnerability (NERV) Centre-க்கு £70 மில்லியனும் வழங்கப்பட உள்ளது. PHP நிரலாக்க மொழியில் கண்டறியப்பட்ட முக்கியக் குறைபாடுகளுக்குப் பிறகு, நீண்டகாலமாக மறைந்திருந்த மென்பொருள் பிழைகளை செயற்கை நுண்ணறிவு விரைவாக கண்டறிந்து தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கைகள் எழுந்துள்ளன. இதுவரை அந்தக் குறைபாடு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதாக தகவல் இல்லை.





























