பொலிஸார் தெரிவித்ததாவது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் தடி திடீரென முறிந்து கீழே சரிந்துள்ளது. அப்போது ஊஞ்சலில் தாயுடன் இருந்த 5 மாதக் குழந்தையின் மீது தடி விழுந்ததால் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் குழந்தையின் தாயாரின் காலிலும் தடி விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் காயமடைந்த தாயார் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை வீடுகளில் குழந்தைகளுக்காக அமைக்கப்படும் ஊஞ்சல்கள் மற்றும் பிற உபகரணங்களின் பாதுகாப்பை அவ்வப்போது பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.





























