அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சட்ட நடைமுறைகளுக்குட்பட்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எந்தவித அழுத்தங்களும் இன்றி உண்மையை வெளிக்கொணர்வதே அரசின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் செம்மணி மனித புதைகுழி சம்பவத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), இந்திய அமைதிப்படை (IPKF) அல்லது இலங்கை ஆயுதப்படைகள் ஆகியவற்றில் யார் காரணம் என்பது குறித்து நடைபெற்று வரும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே உறுதியான முடிவுக்கு வர முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். Semmani Mass Grave
இவ்விவகாரம் இலங்கையின் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் நீதியை நிலைநாட்டும் முயற்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாகவும் அனைத்து ஆதாரங்களும் அறிவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.




























