தொலைபேசி கண்காணிப்பில் சிக்கிய நபர்
2014ஆம் ஆண்டு கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள டெக்ஸ் நிறுவனத்தில் எஸ்தர் ராணி என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெரால்டு கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர், வழக்கில் ஆஜராகாமல் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிலும், திருச்சி சரக துணைத் தலைவர் M.R. சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B. ரகுபதி தலைமையில், கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை, தொடர்புடைய நபர்களின் தொலைபேசி எண்களை தொடர்ந்து கண்காணித்தது.
இதன் மூலம் திருப்பூரில் அவர் பணியாற்றிய இடம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கரூர் நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். Karur murder case arrest நடவடிக்கையுடன், நீதிமன்ற பிடியாணை நிலுவையில் உள்ளவர்களைக் கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், இதுவரை ஆறு ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தெரிவித்தார்.


































