வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி இருப்பைச் சரிபார்த்தபோதோ அல்லது பணப் பரிவர்த்தனை செய்ய முயன்றபோதோ பணம் குறைந்திருப்பதை அறிந்துள்ளனர். பணம் பற்று வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அல்லது அதற்கான ஆவணம் கிடைக்கவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள் இடைநீக்கம்; போலீஸ் விசாரணை
சேமிப்புக் கணக்குகள் மட்டுமின்றி, சில நிலையான வைப்பு கணக்குகளிலிருந்தும் பணம் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிளை மேலாளர் உள்ளிட்ட பல வங்கி ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணம் எவ்வாறு காணாமல் போனது, அது எங்கு சென்றது, இது மோசடியா என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் புகார்கள் உண்மையானவை என உறுதி செய்யப்பட்டால், வங்கியே இழப்பைச் சரிசெய்யும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்குத் தொகையை வங்கி தொடர்ந்து வழங்கி வருகிறது.
Noida PNB account money missing விவகாரம், வங்கி கணக்குகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது. வாரத்திற்கு குறைந்தது ஒருமுறை இருப்பு மற்றும் பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். பரிவர்த்தனை குறுஞ்செய்திகள் வருகிறதா என்பதை உறுதி செய்து, சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வங்கியிலும் சைபர் குற்றப்பிரிவிலும் புகார் அளிக்க வேண்டும். பின் எண், கடவுச்சொல், OTP மற்றும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது.


































