இந்த தீர்மானம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான சீர்திருத்த முயற்சிகளில் ஒன்றாகும் என்றும் SLC குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், 13ஆம் தேதியிலான நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இதனை அவைக்கு தெரிவித்தார்.
இரண்டு பிரிவுகளில் அரசியலமைப்பு சார்ந்த திருத்தம்
Sri Lanka Cricket Bill-இன் இரண்டு பிரிவுகள், அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளுடன் இணங்கும் வகையில் திருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அந்த இரண்டு பிரிவுகளும் அரசியலமைப்புக்கு முரணாக இருக்காது என்றும், மசோதாவை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மசோதாவின் ஏனைய எந்த விதிகளும் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகத்தை வலுப்படுத்தும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என SLC நம்பிக்கை தெரிவித்துள்ளது.


































