முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரியின் மகளான கெய்கோ இதற்கு முன் மூன்று முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். நான்காவது முயற்சியிலேயே அவர் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் தோல்வியடைந்த வேட்பாளர் ரொபெர்டோ சான்சஸ் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெருவின் அரசியல் சூழல் இன்னும் பரபரப்பாகவே தொடரும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவுடன், பல ஆண்டுகளாக அரசியல் நிலையற்ற தன்மையை சந்தித்த பெருவில் புதிய ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது.
































