32 வயதான முகம்மது தாஜிக் (Mohammad Tajik) என்பவர் 53 பேரை ஏற்றிச் சென்ற அதிக நெரிசலான சிறிய படகை இயக்கியதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவம் மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் UK குள் சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாய் கடக்கும் போது பிறரின் உயிரை ஆபத்தில் ஆழ்த்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட முதல் அகதிகளில் ஒருவராக அவர் பதிவாகியுள்ளார். இந்த புதிய குற்றப்பிரிவு 2026 ஜனவரி 5 முதல் அமலுக்கு வந்ததாகவும் இதுவரை இதே சட்டத்தின் கீழ் பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் அரசு மனிதக் கடத்தல் வலையமைப்புகளை கட்டுப்படுத்தவும் ஆபத்தான சிறிய படகு பயணங்களைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2026 ஜூலை 25 வரை ஆங்கிலக் கால்வாய் வழியாக வரும் சிறிய படகு வருகைகள் தொடர்பான கண்காணிப்பையும் உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.































