அதிகாரிகளின் தகவலின்படி 50 கிலோ எடையுடைய யூரியா உரப் பைகளின் விலை மற்றும் தயாரிப்பு விபரங்கள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டிருந்தன. இதன்மூலம் விவசாயிகளை தவறாக வழிநடத்தி கூடுதல் இலாபம் ஈட்ட முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. சுற்றிவளைப்பின் போது 179 உரப் பைகள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட உரப் பைகளும் சந்தேகநபர்களும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் உரங்களை வாங்கும் போது விலை, உற்பத்தி விபரம் மற்றும் லேபிள்களை கவனமாக பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை யூரியா மோசடி போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே விலை மாற்றம், தவறான தகவல் அல்லது சந்தேகத்திற்கிடமான விற்பனை நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.





























