2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வெலகெதர தியகவிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர் அங்கிருந்தவர்களை கற்கள் தடிகள் மற்றும் வாள்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் கடுமையாகக் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு முன்வைத்த சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் கொலை மற்றும் கடுமையான தாக்குதல் குற்றங்களில் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




























