குடும்ப வன்முறைக்கு புதிய அவசர உதவி எண் – சுவிட்சர்லாந்

சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறைக்கு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புதிய அவசர உதவி எண் 142 மே 1 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த சேவை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உதவி தேடும் நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய தடுப்பு முயற்சி Elisabeth Baume-Schneider அவர்களால் தொடங்கப்பட்டது.

142 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் தொழில்முறை ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த சேவையைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பத்திலிருந்தே விளம்பரப் பிரசுரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பரப்பப்பட்டது.

இந்த புதிய முயற்சி வன்முறைக்கு எதிரான பாதுகாப்பையும் ஆதரவையும் வலுப்படுத்தும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading