மேலும் கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குடியேற்றத்தார்களை அவர்கள் எவ்வளவு காலமாக நாட்டில் இருந்தாலும் நாடு கடத்தும் விதமாக சட்டங்களை கடுமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வேலை விசா வழங்கும் திறன் பிரிவுகள் ஆண்டுதோறும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் குடியேற்றத் தொழிலாளர்களிடம் இருந்து தினமும் கட்டணமாக ஒரு கட்டமைப்பு (infrastructure) வரி வசூலிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
கூடுதலாக ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் கடுமையாக்கப்படுவதுடன் விசா காலாவதியானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு அமலாக்க பிரிவு அமைக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் நியூசிலாந்தின் பொருளாதாரம் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக சேமோர் தெரிவித்துள்ளார்.

























