Tag: பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் பள்ளித் தொடக்க உதவித்தொகை 2026 பிரதான பிரான்ஸ் பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் தகுதியான குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது. புதிய கல்வியாண்டை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் ஆடைகள் மற்றும் கல்விச் செலவுகளைச் சமாளிக்க குடும்பங்களுக்கு Allocation de rentrée scolaire எனப்படும் ARS உதவித்தொகை வழங்கப்படுகிறது. சுமார் 30 இலட்சம் குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதாக பிரான்ஸ் அரசின் Service-Public இணையத்தளம் தெரிவித்துள்ளது. பிரதான பிரான்ஸ் பகுதிகள், Guadeloupe, Guyane மற்றும் Martinique […]
பிரான்சில் தேவையற்ற வணிக Commercial தொலைபேசி அழைப்புகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் 2026 ஆகஸ்ட் 11 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி நிறுவனங்கள் பொதுவாக விற்பனை நோக்கில் பொதுமக்களை திடீரென தொலைபேசியில் தொடர்புகொள்வது தடை செய்யப்படுகிறது. புதிய விதிகளின் கீழ் இரண்டு சூழ்நிலைகளில் மட்டும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நோக்கில் அழைக்க அனுமதிக்கப்படும். ஒன்று, ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் வாடிக்கையாளருக்கு ஒப்பந்தம் இருந்தால் அதனுடன் தொடர்புடைய சேவைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்குவதற்காக. மற்றொன்று அந்த நபர் முன்கூட்டியே […]
பாரிஸ் RER D ரயில் சேவையில் மின்சார விநியோகக் கோளாறு மற்றும் கோடைக்கால பராமரிப்புப் பணிகள் காரணமாக பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக RATP அறிவித்துள்ளது. Paris Gare du Nord பகுதியில் ஏற்பட்ட மின்சார விநியோகக் கோளாறின் தாக்கமாக Orry-la-Ville–Coye மற்றும் Gare du Nord இடையிலான ரயில் சேவைகள் தற்போது தடங்கலுடன் இயங்குகின்றன. இதனால் பயண நேரம் அதிகரிக்கலாம் என்றும் சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gare du Nord […]
பிரான்சில் CAF வழங்கும் RSA மற்றும் Prime d’activité உதவித்தொகைகளுக்கான முதல் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தற்போது மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஜூலை முதல் ஏற்கனவே CAF மூலம் ஏதேனும் ஒரு உதவித்தொகையைப் பெறும் நபர்கள் RSA அல்லது Prime d’activité க்கு முதல் முறையாக விண்ணப்பிக்கும் போது அவர்களின் சம்பளம் மற்றும் சில வருமானத் தகவல்கள் தானாகவே முன்நிரப்பப்பட்ட (Pre-filled) நிலையில் காண்பிக்கப்படும். இதனால் விண்ணப்பத்தை விரைவாக சமர்ப்பிக்கவும் சரியான தொகையை பெறவும் உதவும். எனினும் […]
பிரான்சில் Livret A வட்டி விகிதம் 2026 ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. இந்த மாற்றத்தை பிரான்ஸ் அரசின் Service-Public இணையதளம் ஜூலை 15,2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி தற்போது 1.5% ஆக உள்ள Livret A ஆண்டு வட்டி விகிதம் 2026 ஆகஸ்ட் 1 முதல் 1.7% ஆக உயர்கிறது. இதேபோல் Livret A போலவே LDDS (Livret de Développement Durable et Solidaire) சேமிப்புக் கணக்கின் வட்டியும் 1.7% […]
France News, பிரான்ஸ் சத்தத் தொல்லை தொடர்பான வழக்கில் வடக்கு பிரான்சின் Wambrechies பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய ஒருவர் ஒரே பாடலை தொடர்ந்து முழு சத்தத்தில் ஒலிபரப்பி அயலவர்களை திட்டமிட்டு தொந்தரவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் Lille நீதிமன்றத்தில் ஆஜரானார். பாதிக்கப்பட்டதாக கூறிய அயலவர் Mike Brant பாடிய “Laisse-moi t’aimer” என்ற பாடலை குறித்த நபர் 2019ஆம் ஆண்டு நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் ஒலிபரப்பியதாகவும் ஜன்னல் வழியாக அவமதிப்பாக திட்டியதாகவும், மேலும் […]
France Identité செயலியை பயன்படுத்தும் பயணிகளுக்கு பிரான்ஸ் அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிரான்சிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானத்தில் ஏறும் போதும் Check-in சாமான்களை ஒப்படைக்கும் போதும் ஸ்மார்ட்போனில் உள்ள டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை (Digital Identity Card) அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம். இந்த வசதி 2026 ஜூன் 24 முதல் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், இது பிரான்ஸ் விமான நிலையங்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகும். வெளிநாட்டு விமான நிலையங்களில் அல்லது எல்லைக் கட்டுப்பாட்டு […]
பிரான்சில் புதிய கார் விதிமுறை 2026 ஜூலை 7 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறையின்படி அந்த தேதியிலிருந்து பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய கார்கள் மற்றும் வேன்களிலும் கூடுதல் ஓட்டுநர் உதவி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும். இந்த மாற்றம் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் General Safety Regulation (GSR 2) திட்டத்தின் அடுத்த கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது […]
Europe News, பிரான்சில் சமூக மற்றும் வரி மோசடிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் 2026 ஜூன் 25 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் கீழ் வேலை இழப்பு உதவித்தொகை (Allocation chômage / ARE) பெறுபவரிடம் மோசடி செய்ததற்கான வலுவான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதாக France Travail அமைப்பு கருதினால் அவருக்கான உதவித்தொகையை அதிகபட்சம் 3 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்த முடியும். உதவித்தொகை நிறுத்தப்படுவதற்கு முன் அல்லது அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபருக்கு தனது விளக்கத்தையும் […]
கொக்கி குமார் மரணம், பிரான்சில் தமிழ்த் தேசியப் பற்றாளராகச் செயற்பட்டு வந்ததுடன் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மரணம் தொடர்பான தகவல் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருக்கு கிடைத்த தகவல்களின் படி அவர் 2026 ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் அவரது உடல் 2026 ஜூன் 29 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவலின் பின்னரே இந்த சம்பவம் தொடர்பான தகவல் […]