பிரான்சில் மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடுமையான குற்றமாகும். இது உங்கள் எதிர்கால வாகன உரிமை மற்றும் வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தண்டனை விவரங்கள்
- உங்கள் இரத்தத்தில் 0.5g/l முதல் 0.8g/l வரை (அல்லது மூச்சில் 0.25mg/l முதல் 0.4mg/l வரை) ஆல்கஹால் அளவு இருந்தால்:
👉 €135 அபராதம் விதிக்கப்படும்.
👉 அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பிரான்சில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும். - உங்கள் இரத்தத்தில் 0.8g/l-க்கும் அதிகமாக (அல்லது மூச்சில் 0.4mg/l-க்கும் அதிகமாக) ஆல்கஹால் அளவு இருந்தால் அல்லது ஆல்கஹால் பரிசோதனையை மறுத்தால்
👉 அதிகபட்சம் €4,500 வரை அபராதம் விதிக்கப்படும்.
👉 3 ஆண்டுகள் வரை வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும்.
முக்கிய குறிப்புகள்
- ஆல்கஹால் பரிசோதனைக்கு மறுப்பதும் கடுமையான குற்றமாக கருதப்படும்.
- ஒருமுறை குற்றம் நிரூபிக்கப்பட்டால், உங்கள் ஓட்டுநர் வரலாறு (driving record) மற்றும் காப்பீடு (insurance) கட்டணங்களிலும் தாக்கம் ஏற்படும்.
- பிரான்சில் சட்டம் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது சிறிய அளவு கூட சட்டத்திற்கு எதிரானதாகும்





Leave a Reply