சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்ஸில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட மணிக்கு 50 கிமீ அல்லது அதற்கு மேல் வேகத்தில் வாகனம் ஓட்டுவது இனி சாதாரண போக்குவரத்து விதிமீறல் அல்ல. இதற்கான புதிய மாற்றம் 2025 டிசம்பர் 22 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 2025-1269 படி செயல்பட்டுள்ளது.

இதுவரை, அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி 50 கிமீக்கு மேல் ஓட்டுவது 5-ஆம் வகுப்பு குற்றம் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. ஆனால் புதிய சட்டம் இந்த விதிமீறலை குற்றச் செயலாக (Crime / Délit) மாற்றியுள்ளது, அதாவது இதற்கு முன் இருந்த சாதாரண அபராதம் அல்லது சிறிய தண்டனை மீறல் நிலை நீக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிகபட்சமாக 1,500 யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய சட்டம் மூலம் இதற்கு மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இவை

குறைந்தபட்சம் 3,750 யூரோ அபராதம்

2 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

வாகன ஓட்டுநர் உரிமை இடைநீக்கம் அல்லது ரத்து

வாகனம் பறிமுதல் செய்யப்படுதல்

இந்த வகையான வழக்குகள் இனி காவல் நீதிமன்றத்தில் அல்ல, குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. மேலும், குற்றம் நடைபெறும்போது குற்றவியல் பதிவில் (Criminal Record) பதிவு செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.

இந்த சட்ட மாற்றம், சாலைவழி பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆபத்தான வேக ஓட்டத்தை தடுப்பதற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்