சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP எப்.யு. வுட்லர் தெரிவித்ததாவது, இலங்கையில் எந்தவொரு வகை வாகனத்தையும் வெளிநாட்டவர்கள் ஓட்ட விரும்பினால் செல்லுபடியாகும் ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் அல்லது தேவையான ஆவணங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு பிரஜைகள் சர்வதேச ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் அல்லது தங்கள் நாட்டின் உள்நாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால், அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சான்றிதழ் அல்லது அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் என அவர் கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத நடைமுறையை சுட்டிக்காட்டிய அவர், சுற்றுலாப் பயணிகள் திரிவில் ஓட்டுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இதனை அனுமதித்த திரிவில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading