கிரேக்கம், பல்கேரியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டதில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் கிரேக்கத்தில், ஒருவர் பல்கேரியாவில் மற்றும் ஒருவர் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி இந்தக் கும்பல் முக்கியமாக சிரியா மற்றும் எகிப்து நாட்டவர்களால் இயக்கப்பட்டதாகவும் கிரேக்கத்திலிருந்து பல்கேரியா மற்றும் ருமேனியா வழியாக அகதிகளை கொண்டு சென்று பின்னர் இத்தாலி நோக்கி அனுப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி முதல் ஜூலை 2026 வரை நடந்த குறைந்தது 12 அகதி கடத்தல் சம்பவங்களுடன் இந்தக் குழுவுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வாடகைக்கு எடுத்த கார்கள் திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் போலி ஆவணங்களால் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்தியதுடன் சிறிய கார்களில் அகதிகளை எல்லை கடந்தபின் லாரிகளுக்கு மாற்றி இத்தாலி நோக்கி அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Europol இந்த நடவடிக்கையில் உளவுத்தகவல் பரிமாற்றம் தரவு பகுப்பாய்வு மற்றும் சம்பவ இடத்திலேயே மொபைல் அலுவலகம் மூலம் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






























