கொழும்பு: 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தொழில்துறை தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலி உயர்த்தப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
தற்போது ரூ. 1,350 ஆக உள்ள குறைந்தபட்ச தினக்கூலி, 2026 ஜனவரி மாதம் முதல் ரூ. 1,550 ஆக உயர்த்தப்படும். இதனுடன், அரசு தினசரி வருகை ஊக்கத் தொகையாக ரூ. 200 வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளர்கள் தினசரி அதிகபட்சம் ரூ. 1,750 வருமானம் பெற முடியும்.
“தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நியாயமான கூலி வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு,” என்று ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக அரசு ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் பலனாக, நாட்டின் தோட்டத் தொழிலாளர்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய ஊதிய உயர்வை பெறவுள்ளனர்.





Leave a Reply